கவனம் ஈர்க்கும் விக்ரமின்  ’மகான்’ ட்ரெய்லர்

கவனம் ஈர்க்கும் விக்ரமின் ’மகான்’ ட்ரெய்லர்

கவனம் ஈர்க்கும் விக்ரமின் ’மகான்’ ட்ரெய்லர்
Published on

நடிகர் விக்ரமின் ‘மகான்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதையொட்டி தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஏற்கெனவே, டீசர் வரவேற்பை பெற்ற நிலையில், ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பாப்பை எகிறவைத்துள்ளது.

மது ஒழிப்புப் போராளியான ஆடுகளம் நரேன் தனது மகனான விக்ரமையும் மது ஒழிப்பை கையிலெடுத்து பெரிய மகான் ஆகச்சொல்கிறார். ஆனால், ஆசிரியரான விக்ரம் சூழல்களால் சாராயம் காய்ச்சி விற்று சம்பாதிக்கிறார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக ’ஒரு மது ஒழிப்புப் போராளியோட மகன் ஊருக்கெல்லாம் சாராயம் காய்ச்சிட்டிருக்க’  என்று காட்சிகளும் வசனங்களும் அமைந்திருக்கின்றன.

‘சரக்கு சாம்ராஜ்யத்தின் மகாராஜா எங்கப்பன்’ என்கிறார் துருவ் விக்ரம். ஆசிரியர் ப்ளஸ் அடாவடி சாராயம் காய்ச்சும் வியாபாரியாக கவனம் ஈர்க்கிறார் விக்ரம். அவரைவிட துருவ் விக்ரமும் ஃபிட்டான உடலமைப்புடன் புருவம் உயர்த்த வைக்கிறார். இவர்கள் இருவரை விடவும் வித்தியாசமான கெட்டப்பில் பாபி சிம்ஹா மிரட்டல் தருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com