\
ஜனவரி 26-ல் வெளியாகும் விக்ரமின் ’மகான்’

ஜனவரி 26-ல் வெளியாகும் விக்ரமின் ’மகான்’

ஜனவரி 26-ல் வெளியாகும் விக்ரமின் ’மகான்’
Published on

விக்ரமின் ‘மகான்’ வரும் ஜனவரி 26 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது.

டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், ஜனவரி 26 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘மகான்’ குடியரசு தினத்தையொட்டி வெளியாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’,‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘விக்ரம் 61’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com