\
’நாச்சி’ ஆக கவனம் ஈர்க்கும் சிம்ரன்: ‘மகான்’ கேரக்டர் போஸ்டர் வெளியீடு

’நாச்சி’ ஆக கவனம் ஈர்க்கும் சிம்ரன்: ‘மகான்’ கேரக்டர் போஸ்டர் வெளியீடு

’நாச்சி’ ஆக கவனம் ஈர்க்கும் சிம்ரன்: ‘மகான்’ கேரக்டர் போஸ்டர் வெளியீடு
Published on

விக்ரமின் ‘மகான்’ படத்தின் சிம்ரன் கதாபாத்திரப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் வெளியாகவுள்ள நிலையில், கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. நேற்று பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியான நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன் கதாபாத்திரப் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

நாச்சியாக நடிக்கும் சிம்ரன் வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கிறார். ‘பிதாமகன்’ படத்திற்குப் பிறகு விக்ரமும் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்கள். விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முனீஸ்காந்த் ஞானமாகவும், சனந்த் ராக்கியாகவும் நடிக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com