\
நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்...

நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்...

நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்...
Published on: 

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் இன்று காலமானார்.

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் (80) முன்னாள் ராணுவ வீரர். இவர் கன்னட மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அத்துடன் நடனத்திலும், பாடலிலும் சிறந்து விளங்கியவர். கில்லி, திருப்பாச்சி போன்ற தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். அத்துடன் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக நடிக்காமல் ஓய்வெடுத்து வந்த இவர், இன்று கோடம்பாக்கம் மகாலிங்கப்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதையடுத்து குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com