‘கோப்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரம்

‘கோப்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரம்

‘கோப்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரம்
Published on

‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விக்ரமின் ‘கோப்ரா’ படமும் ஒன்று. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘மகான்’ எதிர்பார்த்த வெற்றியைக் குவிக்கவில்லை. ரசிகர்களுக்காக ஒரு வெற்றியைக் கொடுத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் விக்ரம். இதற்கு காரணம், ஒரேயொரு ‘மகான்’ மட்டுமே தோல்வி அல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரமின் நடிப்பில் வெளியான 6 படங்கள் தோல்வியைத் தழுவின. இப்படியொரு நிலையில்தான், ‘கோப்ரா’ வெளியாகவுள்ளது. அதனால், ரசிகர்களுக்கு மட்டுமல்ல விக்ரமுக்கும் முக்கியமானப் படம்தானே?

அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குநர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், ‘கோப்ரா’ வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com