விக்ரம் - கார்த்திக் சுப்பராஜ் இணையும் படத்தின் பெயர் ‘மகான்'

விக்ரம் - கார்த்திக் சுப்பராஜ் இணையும் படத்தின் பெயர் ‘மகான்'

விக்ரம் - கார்த்திக் சுப்பராஜ் இணையும் படத்தின் பெயர் ‘மகான்'
Published on

விக்ரம் - துருவ் விக்ரம் நடித்துள்ள ‘விக்ரம் 60’  படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'விக்ரம் 60' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விக்ரம் 60' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. ’மகான்’ என்று பெயரிட்டிருந்தாலும், தலையில் கொம்புடன் கருப்பு நிற உடையில் பின்னால் பல கைகளுடன் புல்லட்டில் அரக்கர் கெட்டப்பில் இருக்கும் விக்ரம் கவனம் ஈர்க்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com