\
பொங்கலையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் ‘மகான்’?

பொங்கலையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் ‘மகான்’?

பொங்கலையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் ‘மகான்’?
Published on: 

நடிகர் விக்ரமின் ‘மகான்’ பொங்கலையொட்டி வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மகான்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. படம் பொங்கலையொட்டி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக பா.ரஞ்சித்தின் புதிய படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com