\
பிப்ரவரி-10 ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் ‘மகான்’

பிப்ரவரி-10 ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் ‘மகான்’

பிப்ரவரி-10 ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் ‘மகான்’
Published on

விக்ரமின் ‘மகான்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது.  ’மகான்’ வெளியீட்டுத் தேதியை கடந்த ஆண்டே எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அறிவித்திருக்கிறது படக்குழு.  அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் வெளியாகிறது என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’,‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அடுத்ததாக, இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘விக்ரம் 61’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com