ஆகஸ்ட் 20-ல் வெளியாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘விக்ரம் 60’ ஃபர்ஸ்ட் லுக்
விக்ரம் - துருவ் விக்ரம் நடித்துள்ள ‘விக்ரம் 60’படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்திருக்கிறது படக்குழு.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'விக்ரம் 60' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'விக்ரம் 60' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘விக்ரம் 60’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டனர்.
இந்த நிலையில், தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வெளியீட்டு தேதியையும் கார்த்திக் சுப்பராஜ் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். வரும், ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. விக்ரம் - அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.