\
'எமன்' படத்தில் இரண்டு எமன்கள்!

'எமன்' படத்தில் இரண்டு எமன்கள்!

'எமன்' படத்தில் இரண்டு எமன்கள்!
Published on

தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்புகளை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டவர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ படங்களை தொடர்ந்து தற்போது ‘எமன்’ என்ற வித்தியாசமான தலைப்பின் மூலம் களம் இறங்கியுள்ளார். ஜீவா சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இப்பட கதையை ஏற்கனவே நான் கேட்டு இருக்கிறேன். இந்த எமனை மிஸ் பண்ணிட்டோமேனு வருத்தப்பட்டு இருக்குறேன். படத்தில் இரண்டு எமன்கள் உள்ளனர். ஒன்னு விஜய் ஆண்டனி, இன்னொன்று ஜீவா சங்கர் என்றார். மேலும், ‘பிச்சைக்காரன்’ என்ற தலைப்பை எப்படி இவர் தேர்வு செய்தார் என்று ஆச்சர்யப்பட்டேன் அந்த படத்தை பார்த்த போதுதான் படத்தின் கதையை எப்படி கையாண்டு இருக்கிறார் என்பது புரிந்தது. அவர் தன் மீதும் சினிமா மீதும் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். தரமான கதைகளை தேர்ந்தெடுகிறார். அதற்கு எனது வாழ்த்துகள் என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com