சமூக வலைதளங்களில் வைரலான விஜய் சேதுபதியின் பிஎம்டபிள்யூ பைக்

சமூக வலைதளங்களில் வைரலான விஜய் சேதுபதியின் பிஎம்டபிள்யூ பைக்

சமூக வலைதளங்களில் வைரலான விஜய் சேதுபதியின் பிஎம்டபிள்யூ பைக்
Published on

நடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள புதிய பிஎம்டபிள்யூ (BMW) பைக்கின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

எந்தவொரு சினிமா குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது திறமை மூலம் கோலிவுட் திரையுலகில் தனக்கென இடம்பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமன்றி மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். படத்துக்கு படம் வித்தியாசம். வித விதமான கெட்டப்புகள், அடுத்தடுத்த படங்கள் என விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார். இது போக சின்னத்திரையிலும் ஒரு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். 

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியே நேற்று ட்ரெண்டாகி இருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பைக்கின் புகைப்படம் இன்று ட்ரெண்ட் ஆகியுள்ளது.

BMW G310 GS ரக பைக்கை விஜய் சேதுபதி தற்போது வாங்கியுள்ளார். பைக் ஷோரூமில் சாவியை பெற்றுக்கொள்ளும் புகைப்படமும், பைக்கில் அமர்ந்துகொண்டு இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைக் பிரியரான விஜய் சேதுபதி, 96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமாருக்கு 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள புல்லட் பைக் ஒன்றை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com