\
தனது மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீஸில் புகார்

தனது மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீஸில் புகார்

தனது மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீஸில் புகார்
Published on

தனது மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திரைப்பட நடிகர் விஜயகுமார் மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மகள் வனிதாவிற்கு வீட்டின் உரிமை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரவாயல் காவல்நிலையத்தில் மகள் மீது விஜயகுமார் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகள் வனிதா தனது வீட்டை படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வீட்டை வாடகைக்கு விட்டதாகவும், தற்போது வனிதா வீட்டை அவரது வீடு என்று கூறி காலி செய்யாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com