\
’விஜய் 66’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு: போட்டோவுடன் படக்குழு வெளியிட்ட அப்டேட்

’விஜய் 66’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு: போட்டோவுடன் படக்குழு வெளியிட்ட அப்டேட்

’விஜய் 66’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு: போட்டோவுடன் படக்குழு வெளியிட்ட அப்டேட்
Published on

‘விஜய் 66’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் 'விஜய் 66’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய ‘விஜய் 66’ படப்பிடிப்பு குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் ஷாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்டப் பலர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ‘விஜய் 66’ படத்தை வெளியிடவுள்ளது படக்குழு.

கடந்த ஒரு மாதம் மேலாக ஹைதராபாத்தில் ‘விஜய் 66’ படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பின்போது மரியாதை நிமித்தமாக விஜய் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வை சந்தித்தார். இந்த நிலையில், இன்று ‘விஜய் 66’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதனை, விஜய் வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது படக்குழு. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் சென்னை  கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 22 விஜய்  பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com