\
யுகாதி அன்று தொடங்கும் ’விஜய் 66’ படப்பிடிப்பு

யுகாதி அன்று தொடங்கும் ’விஜய் 66’ படப்பிடிப்பு

யுகாதி அன்று தொடங்கும் ’விஜய் 66’ படப்பிடிப்பு
Published on

’விஜய் 66’ படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் 'விஜய் 66’ படத்தில் நடிக்கவுள்ளார். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ‘விஜய் 66’ படப்பிடிப்பு தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான ஏப்ரல் 2 ஆம் தேதி கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com