பிகில் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்!
ஒரு வார்த்தை ட்வீட் செய்தது மூலம் விஜய், நயன்தாரா ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பிகில் ஃபீவரை உருவாக்கியுள்ளனர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்னதாகவே வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்துக்கு ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் எந்தத் திரைப்படத்துக்கும் சிறப்புக் காட்சிகள் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிகில் வெளியீட்டுக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் பிகில் மற்றும் கைதி படக்குழுவினர் படத்துக்கான விளம்பரங்களை தீவிரமாக செய்து வருகின்றனர். படக்குழு மட்டும் நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலமும் படம் குறித்து விளம்பரம் செய்கின்றனர். இந்நிலையில் பிகில் என்ற ஒரே ஹேஸ்டேக்கை நடிகர் விஜய், மற்றும் நடிகை நயன்தாரா பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் பிகில் ஃபீவரை உருவாக்கியுள்ளனர்.
பிகில் ஹேஸ்டேக்குக்கு புதிய எமோஜிகளை ட்விட்டர் வெளியிட்டது. இந்நிலையில் விஜய், நயன்தாரா பதிவிட்ட ஹேஸ்டேக்கில் எமோஜி இடம்பிடித்துள்ளது.