சொகுசு கார் வழக்கு: நடிகர் விஜய் மேல்முறையீடு இன்று விசாரணை?
சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் விமர்சனங்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குகோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார். குறிப்பாக நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். விஜயின் இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.