சினிமா
நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை: விஜய் தரப்பில் விளக்கம்
நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை: விஜய் தரப்பில் விளக்கம்
எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம்தான் கலைக்கப்பட்டது என்று நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
தன்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற நடிகர் விஜய்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம்தான் கலைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அது கலைக்கப்படவில்லை என நடிகர் விஜய்யின் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிக்க: “விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு” - எஸ்.ஏ சந்திரசேகர்