\
நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’
Published on

விஜய் சேதுபதியின் ‘துக்ளக்’ தர்பார் நேரடியாக டிவியில் வெளியாகவிருக்கிறது.

பார்த்திபன் அரசியல்வாதியாகவும், அவரின் அடியாளாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இப்படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே, இப்படம் அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ’துக்ளக் தர்பார்’ திரைப்படத்தை சன் டிவியில் வெளியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. மேலும், ’துக்ளக் தர்பார்’ படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர், லலித்குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com