சினிமா
கண் கட்டி பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய விஜய் சேதுபதி
கண் கட்டி பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய விஜய் சேதுபதி
தன்னை பார்க்க விரும்பிய கண்களில் கட்டி ஏற்பட்டு அவதிபட்ட சிறுவனை நேரில் அழைத்து நம்பிக்கையூட்டியிருக்கிறார், நடிகர் விஜய் சேதுபதி.
அந்த சிறுவன் ’தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதிதான். அவரைப் பார்க்கவேண்டும்’ என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து சிறுவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து நம்பிக்கையூட்டியிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.