த்ரிஷா கூட நடிப்பேன்னு கனவிலும் நெனைக்கல....விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

த்ரிஷா கூட நடிப்பேன்னு கனவிலும் நெனைக்கல....விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

த்ரிஷா கூட நடிப்பேன்னு கனவிலும் நெனைக்கல....விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Published on

திரிஷாவுடன் நடிப்பேன் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். 

90களில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் 96 படத்தில் விஜய் சேதுபதியுடன், முதல்முறையாக திரிஷா நடிக்கிறார். பூஜை விழாவில் பேசிய விஜய் சேதுபதி, நான் சின்ன நடிகனாக இருந்தபோதே திரிஷா பெரிய ஸ்டார். அவரது விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு நான் தீவிர ரசிகன். திரிஷாவுடன் நான் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. அது இப்போது நடந்திருக்கிறது. 96 படம் பள்ளிபருவத்தில் நடக்கும் காதல் கதை. நம் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் நடக்கவில்லையே என்று ஏங்கவைக்கும் என்று பேசினார். விழாவில் பேசிய திரிஷா, இது அழகிய காதல் கதை. பார்க்கும்போது கண்ணீரை வரவழைக்கும். கடந்த ஓராண்டில் நிறைய புதுமுகங்களுடன் நடித்து விட்டேன். விஜய் முதல் விஜய் சேதுபதி வரையிலான இந்த பயணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று அவர் பேசினார். நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பிரேம்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com