''நானே சரித்திரமாக மாறிவிட்டேன்'' - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீதக்காதி படத்தின் ட்ரெய்லர்

''நானே சரித்திரமாக மாறிவிட்டேன்'' - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீதக்காதி படத்தின் ட்ரெய்லர்

''நானே சரித்திரமாக மாறிவிட்டேன்'' - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீதக்காதி படத்தின் ட்ரெய்லர்
Published on

நடிகர் விஜய்சேதுபதியின் 25 ஆவது படமான "சீதக்காதி" படத்தின் டிரைலர் இன்று வெளியானது. டிசம்பர் 20 இல் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி வெற்றியடைந்தது. இதனையடுத்து தனது 25 ஆவது படமான "சீதக்காதி" மூலம் மீண்டும் பாலாஜி தரணிதரனுடன் இணைந்தார் விஜய் சேதுபதி.  இப்படத்தில் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் 5 பேர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

மிகவும் வயதான தோற்றத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் ‘சீதக்காதி’ முதல் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனையடுத்து கையில் வில்லுடன் வேடன் வேடத்தில் விஜய் சேதுபதி இருப்பது போல வெளியான போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் 16ம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு என்று விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இந்நிலையில் இன்று சீதக்காதி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி அய்யா என்ற திரைப்பட நடிகர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. பரபரப்பாக தொடங்கும் ட்ரெய்லர் மெல்ல மெல்ல சோகத்தை தொடுகிறது. யார் இந்த அய்யா என்ற ஒரு எதிர்பார்ப்பை சீதக்காதி ட்ரெய்லர் ஏற்படுத்துகிறது. நம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ட்ரெய்லரில் யாருமே காட்டப்படவில்லை. முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை சுற்றியே ட்ரெய்லர் ஓடி முடிகிறது. 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரின் இசைக்கோர்ப்பு ட்ரெய்லருக்கு உயிரூட்டுகிறது.

விஜய் சேதுபதியின் 25வது படம், வித்தியாசமான தோற்றம், வெற்றிக்கூட்டணி என சீதக்காதி திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com