விஜய் சேதுபதியின் "சீதக்காதி" ! டிரைலர் இன்று வெளியீடு

விஜய் சேதுபதியின் "சீதக்காதி" ! டிரைலர் இன்று வெளியீடு

விஜய் சேதுபதியின் "சீதக்காதி" ! டிரைலர் இன்று வெளியீடு
Published on

சீதக்காதி படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி வெற்றியடைந்தது. இதனையடுத்து தனது 25 ஆவது படமான "சீதக்காதி" மூலம் மீண்டும் பாலாஜி தரணிதரனுடன் இணைந்தார் விஜய் சேதுபதி.  இப்படத்தில் நம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் 5 பேர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

மிகவும் வயதான தோற்றத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் ‘சீதக்காதி’ முதல் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனையடுத்து கையில் வில்லுடன் வேடன் வேடத்தில் விஜய் சேதுபதி இருப்பது போல வெளியான போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் 16ம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு என்று விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இந்நிலையில் சீதக்காதி படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 20ல் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதியை காண அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com