விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ்

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ்

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ்
Published on

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் ஆர்.கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.

விஜய் சேதுபதி - சீனுராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘மாமனிதன்’ படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இப்படத்திற்கு சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே, விஜய் சேதுபதி-சீனு ராமசாமி-யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பாராட்டுக்களைக் குவித்த ‘தர்மதுரை’ படத்தை நடிகர் ஆர்.கே சுரேஷ்தான் தயாரித்தார்.

இந்த நிலையில், மே மாதம் திரைக்கு வரவிருக்கும் ‘மாமனிதன்’ படத்தின் தமிழகம் மற்றும் கேரள தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com