ஓடிடியில் வெளியானது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

ஓடிடியில் வெளியானது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

ஓடிடியில் வெளியானது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’
Published on

ஓடிடியில் வெளியாகியுள்ளது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’.

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கியிருப்பதோடு ஒளிப்பதிவு செய்தும் தயாரித்தும் இருக்கிறார். விஜய் சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

சந்தோஷ் நாராயணனும் ரிச்சர்ட் ஹார்வியும் இசையமைத்துள்ளார்கள். ’நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் தரமான படைப்பு’ என்று ‘கடைசி விவசாயி’ படத்தை பொதுமக்களும் திரைத்துறையினரும் தற்போதுவரை கொண்டாடி வருகிறார்கள்.

இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், ஒரு மாதம் கழித்து இன்று ‘கடைசி விவசாயி’ சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com