கோமதி மாரிமுத்துவுக்கு விஜய்சேதுபதி பரிசுத் தொகை வழங்கி வாழ்த்து !

கோமதி மாரிமுத்துவுக்கு விஜய்சேதுபதி பரிசுத் தொகை வழங்கி வாழ்த்து !
கோமதி மாரிமுத்துவுக்கு விஜய்சேதுபதி பரிசுத் தொகை வழங்கி வாழ்த்து !

கோமதி மாரிமுத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை தனது ரசிகர் மன்றம் மூலமாக வழங்கி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழக வீராங்கனையான கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதன்மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை கோமதி மாரிமுத்து பெற்றுத்தந்தார். தங்க மகள் கோமதிக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனைதொடர்ந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு சில அரசியல் கட்சிகள் பரிசுத்தொகை வழங்கியுள்ளனர். இந்நிலையில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி தங்க மகள் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை வழங்கியுள்ளார். அதனை தன்னுடைய ரசிகர் மன்றம் மூலமாக கோமதியிடம் ஒப்படைத்து தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com