அடிப்படை வசதியை தீர்க்காதவர்கள் பாடம் எடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி

அடிப்படை வசதியை தீர்க்காதவர்கள் பாடம் எடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
அடிப்படை வசதியை தீர்க்காதவர்கள் பாடம் எடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
Published on

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 ‌வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பத்திற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியது. பல தரப்பில் இருந்து கண்டன குரல்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் "ஆசிஃபா சம்பவம் மனதிற்கு வலியையும், வேதனையையும் தருவதாகவும், பெண் குழந்தைகளை மதிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டி உள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபவர்கள் ஒரு புறம் என்றால், இது போன்ற சம்பவங்களுக்கு படித்த சிலரே ஆதரவாக இருப்பது கோபத்தை உண்டாக்குகிறது. 

அம்மாவாகவோ, மகளாகவோ, மனைவியாகவோ எல்லோர் வீட்டிலுமே பெண்கள் இருக்கும் நிலையில், பெண்களையும் குழந்தைகளையும் எப்படி மதிப்பது என்ற பாடம் எந்த வகையில் எடுப்பது என்றே தெரியவில்லை. மேலும் இதுபோன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நமக்கான வேலைவாய்ப்போ, அடிப்படை வசதியோ தீர்க்காதவர்கள், நாம் எந்த ஜாதியை சேர்ந்தவன், எந்த மதத்தை சேர்ந்தவன், எதை கடைபிடிக்கனும் என நமக்கு பாடம் எடுத்து கொண்டே இருப்பார்கள். இங்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் ஆசிஃபா பாலியல் வன்கொடுமைகளுக்கு எந்த தண்டணை கொடுத்தாலுமே அது போதாது என்றார் விஜய் சேதுபதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com