"நீங்கள் நினைப்பது நடைபெறும்" - மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு?

"நீங்கள் நினைப்பது நடைபெறும்" - மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு?

"நீங்கள் நினைப்பது நடைபெறும்" - மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு?
Published on

நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என மக்கள் இயக்க அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடம் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் ஒருபுறம் 20 ஆண்டுகளாக வந்திருந்தாலும், அதற்கு மத்தியில் சமீப ஆண்டுகளாக நடிகர் விஜயும்  அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா' என்ற விவாதம் அவ்வவ்போது எழுந்த வண்ணம் இருக்கின்றது. ரஜினியே 20 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் இப்போதுதான் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் திடீரென ஒரு கட்சி தொடங்கினார். ஆனால் அதற்கு விஜய் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சி நடவடிக்கையையே கைவிட்டுவிட்டதாக எஸ்.ஏ.சி கூறிவிட்டது.

இந்நிலையில், தன்னுடைய மக்கள் இயக்கத்தில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், ரசிகர்களை சென்னையை அடுத்த பனையூர் அலுவலகம் வரவழைத்து நடிகர் விஜய் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அப்போதும்,  ரசிகர்கள், இயக்க நிர்வாகிகள் யாரும் மாற்று கட்சியில் சேர வேண்டாம் என நிர்வாகிகளை நடிகர் விஜய் வலியுறுத்தியதாகவும் நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என ரசிகர்களிடம் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள்  உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com