\
விஜயின் ‘வாரிசு’ பட தயாரிப்பாளருக்கு குழந்தை பிறந்தது - குவியும் வாழ்த்துகள்

விஜயின் ‘வாரிசு’ பட தயாரிப்பாளருக்கு குழந்தை பிறந்தது - குவியும் வாழ்த்துகள்

விஜயின் ‘வாரிசு’ பட தயாரிப்பாளருக்கு குழந்தை பிறந்தது - குவியும் வாழ்த்துகள்
Published on

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து, அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. 51 வயதான தில் ராஜூவின் முதல் மனைவி அனிதா உடல்நிலை குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தநிலையில், இரண்டவதாக தன்னை விட மிகவும் குறைந்த வயதுடைய தேஜஸ்வினி என்கிற வைகா ரெட்டி என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து கர்ப்பமாக இருந்த தில் ராஜூவின் மனைவி வைகா ரெட்டிக்கு இன்று காலை ஐதராபாத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தில் ராஜூவுக்கு அவரின் முதல் மனைவி மூலம் ஹன்ஷிதா ரெட்டி என்ற மகள் இருக்கிறார். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். விஜயின் ‘வாரிசு’ படம் மட்டுமின்றி, ராம்சரண் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஆர்.சி. 15’ படத்தையும் தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com