\
நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஜனவரி 13-ல் ரிலீஸ்!

நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஜனவரி 13-ல் ரிலீஸ்!

நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஜனவரி 13-ல் ரிலீஸ்!
Published on

தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் 2021, ஜனவரி 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார். 

கொரோனா பெருந்தொற்றினால் திரை அரங்குகள் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி இருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய் கொண்டிருந்தது. OTTயில் வெளியாகுமா என பேசப்பட்டு வந்த நிலையில் மாஸ்டர் திரை அரங்குகளில் வரும் 13-ஆம் தேதி வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு போன்றோர் நடித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com