நடிகர் விஜயின் ‘தளபதி 66’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கும் புதியப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப்படம் நடிகர் விஜயின் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று குடும்ப பின்னணிப் படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஏற்கனவே ‘தளபதி 66’ படத்திற்கு தெலுங்கில் ‘வரசுடு’ ('Varasudu') என்றும், தமிழில் ‘வாரிசு’ என்றும் தலைப்பு வைக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜயின் பிறந்த நாளான ஜுன் 22-ம் தேதியை முன்னிட்டு, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 21-ம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

HE IS RETURNING...#Thalapathy66FLon21st #Thalapathy66

Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/vXddUbOSzA
— Sri Venkateswara Creations (@SVC_official) June 19, 2022

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், விஜயின் 67-வது படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் விஜயின் 48-வது பிறந்த நாளையொட்டி, சமூக வலைத்தளங்களில் Common Display Picture எனப்படும் CDP வெளியிடப்பட்டுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, இயக்குநர் ஏ.எல். விஜய், இசைமையப்பாளர் தமன் பூஜா ஹெக்டே, பிரேம்ஜி, காஜல் அகர்வால் உள்பட 48 பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

Super happy & excited to launch the Common DP to celebrate Thalapathy @actorvijay sir's 48th Birthday!!#Thalapathy48BirthdayCDP pic.twitter.com/UIFtYuBAml
— Pooja Hegde (@hegdepooja) June 18, 2022

This is for all Thalapathy fans ❤️ Honoured to Release the Common DP on the occasion of Thalapathy @actorvijay birthday! Happy bday VJ! Have a fab one my fav :)
Design: @shynu_mash#Thalapathy48BirthdayCDP@Jagadishbliss @VijayFansTrends pic.twitter.com/vQKGoCKU1I
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) June 18, 2022