விஜய்யின் 69வது படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனரா?

விஜயின் 69வது படத்தை இயக்குனர் அட்லி இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெங்கட்பிரபு, இயக்கத்தில் விஜய் தனது 68வது படமான தி கிரேட்டஸ் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், வைபவ், மோகன் ஸ்னேகா ஆகியோர் நடித்துவருகின்றனர். யுவன் இசையமைக்கிறார்.

விஜய் - தளபதி 69
தமிழக வெற்றிக் கழக உறுப்பினராக இணைவது எப்படி? விஜய் வெளியிட்ட வீடியோ!

இப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 69 வது படத்தை இயக்குனர்கள் வெற்றிமாரன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பெயர்கள் பேசப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் அட்லி விஜய்யை இயக்கப்போவதாக புதிய தகவல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

விஜய் - அட்லி
விஜய் - அட்லி

ஆனால் அட்லி இதுகுறித்து உறுதிபடுத்தவில்லை. அட்லி ஏற்கனவே விஜய்யின் தெரி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றியை குவித்த நிலையில் தனது 6வது படத்தின் கதை விவாதத்தில் தற்போது இருப்பதாக சமூக வலைதளத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அது விஜய்யின் 69வது படமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகிக்கின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com