விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் ’விஜய் 65’ ஃபர்ஸ்ட் லுக்: அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் ’விஜய் 65’ ஃபர்ஸ்ட் லுக்: அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் ’விஜய் 65’ ஃபர்ஸ்ட் லுக்: அதிகாரபூர்வ அறிவிப்பு

’விஜய் 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளையொட்டி வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’விஜய் 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சிகள் ஜார்ஜியாவில் எடுக்கப்பட்டன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியையொட்டி 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘விஜய் 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தற்போது அறிவித்துள்ளார்கள். ஜூன் 21 ஆம் தேதி, இப்படத்தை இயக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள். அன்று மாலை மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது. விஜய், நெல்சன் திலீப்குமார் இருவரின் பிறந்தநாளையும் ஒரே நேரத்தில் சிறப்பித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com