கையில் குழந்தையை ஏந்தி நிற்கும் விஜய் - ட்விட்டரை தெறிக்கவிடும் புகைப்படம்

கையில் குழந்தையை ஏந்தி நிற்கும் விஜய் - ட்விட்டரை தெறிக்கவிடும் புகைப்படம்
கையில் குழந்தையை ஏந்தி நிற்கும் விஜய் - ட்விட்டரை தெறிக்கவிடும் புகைப்படம்

கையில் குழந்தையுடன் விஜய் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது என்று சொல்லப்படும் நிலையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘அரபிக் குத்து’ வெளியாகி உலக லெவல் ஹிட் அடித்துள்ளது. இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை யூட்டியூபில் கடந்துள்ளது. ‘பீஸ்ட்’ வெளியான பிறகு வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘விஜய் 66’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் விஜய் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய் குழந்தை ஒன்றை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. குழந்தையும் வாயில் கையை வைத்து விஜய்யை வியப்புடன் பார்ப்பதுபோல் இருக்கும் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார். அவர் தற்போது சென்னையில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்தின் மகளுக்கு சமீபத்தில் பிறந்த குழந்தையை தூக்கி விளையாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com