”விஜய் சூப்பர் ஹீரோ; தூக்கத்தில்கூட சிறப்பாக நடனம் ஆடுவார்” – துல்கர் சல்மான்

”விஜய் சூப்பர் ஹீரோ; தூக்கத்தில்கூட சிறப்பாக நடனம் ஆடுவார்” – துல்கர் சல்மான்
”விஜய் சூப்பர் ஹீரோ; தூக்கத்தில்கூட சிறப்பாக நடனம் ஆடுவார்” – துல்கர் சல்மான்

”விஜய் தூக்கத்தில்கூட சிறப்பாக நடனம் ஆடுவார்” என்று பாராட்டியிருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான்.

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.  அடுத்ததாக , அவர் நடித்துள்ள ‘குருப்’ இன்று உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் ‘குருப்’ வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘குருப்’ வெளியாவதற்கு முன்பு படத்தின் புரொமொஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த துல்கர் சம்லான் நடிகர் விஜய்யை சூப்பர் ஹீரோ என்றிருக்கிறார்.

ஏற்கனவே, துல்கர் சல்மான் விஜய் ஃபேன் என்பதோடு அவரது நடனத்தைப் பாராட்டியிருக்கிறார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து துல்கர் சல்மானிடம் கேட்டபோது, ”விஜய் ஒரு சூப்பர் ஹீரோ. தூக்கத்தில்கூட சிரமமின்றி சிறப்பாக நடனமாடுவார். ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவரது நடனத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன்” என்று வியப்புடன் பாராட்டியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com