இடித்து தரைமட்டமாக்கப்பட்ட விஜய்யின் நீலாங்கரை வீடு

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட விஜய்யின் நீலாங்கரை வீடு

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட விஜய்யின் நீலாங்கரை வீடு
Published on

நடிகர் விஜய்யின் நீலாங்கரை வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் பல காலமாக சாலிக்கிராமத்தில்தான் வாழ்ந்து வந்தார். அதன் பின் அந்த வீட்டைவிட்டு அடையார் பகுதிக்குப் போனார். சாலிக்கிராமத்தை விட்டு விஜய் வெளியேறியது அந்த வீட்டிற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வாடகைக்கு வந்தார். அடையாறில் அம்மா, அப்பாவுடன் வாழ்ந்து வந்த விஜய்க்கு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் வளரவளர இட பற்றாக்குறை ஏற்படவே விஜய் வேறு வீட்டுக்குப் போக முடிவு செய்தார். அதன் பிறகு தனியாக ஒரு வீட்டைக்கட்டிக் கொள்ள முடிவு செய்தார். அதன் படி நீலாங்கரைப் பகுதியில் அமைதியான சூழலில் ஒரு வீட்டைக்கட்டினார். அந்த வீடு இப்போது நெருக்கடி நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. மீண்டும் ஆடம்பரமாக ஒரு வீட்டைப் பனையூரில் கட்டினார். அங்கே போன பிறகு விஜய்யின் நடமாட்டம் மிக ரகசியமாகிவிட்டது. 

இந்நிலையில் விஜய் தனது நீலாங்கரை வீட்டை இடித்துக்கட்டி வருகிறார். அவரது விருப்பப்படி வீடு முழுமையாக இடிக்கப்பட்டுவிட்டது. பிள்ளைகள் பிற்காலத்தில் செளகர்யமாக வளர அந்த வீட்டை அவர் பயன்படுத்தலாம் என அவரது நெருங்கிய வட்டம் கூறுகிறது. மேலும் அதிநவீன வசதியாக அந்த வீடு மாற்றப்பட இருப்பதாக, அங்கே பணி புரியும் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com