விஜய்க்கு ரூ.500 அபராதம் - கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால் நடவடிக்கை

விஜய்க்கு ரூ.500 அபராதம் - கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால் நடவடிக்கை
விஜய்க்கு ரூ.500 அபராதம் - கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால் நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறி, நடிகர் விஜய்யின் கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படம், ஆந்திராவில் சங்ராந்தி (பொங்கல்) பண்டிகை தினத்தில் வெளியாவதில் சிக்கல் நீடித்துவந்தநிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கடந்த 20-ம் தேதி பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு திரும்பியபோது விதிகள் மீறி நடிகர் விஜய்யின் காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து நடிகர் விஜய்யின் கார் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 500 அபராதம் விதித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com