\
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி வசூலிக்க தடைக் கோரியிருந்தார் நடிகர் விஜய். நடிகர் விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து தள்ளுபடி செய்ததுடன் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ

பராதத் தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்க அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்றம்,  நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com