\
நேற்று மரக்கன்று.. நாளை நல்லாட்சி : மதுரை விஜய் ரசிகர்களின் புதிய போஸ்டர்..!

நேற்று மரக்கன்று.. நாளை நல்லாட்சி : மதுரை விஜய் ரசிகர்களின் புதிய போஸ்டர்..!

நேற்று மரக்கன்று.. நாளை நல்லாட்சி : மதுரை விஜய் ரசிகர்களின் புதிய போஸ்டர்..!
Published on: 

ஆந்திர நடிகரின் சவாலை ஏற்ற மரக்கன்று நட்ட விஜய், நாளை ஆந்திர முதல்வரை போல தமிழகத்தில் நல்லாட்சி கொடுப்பார் என விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர் மகேஷ்பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு, கீரின் இந்தியா சேலன்ஜ் என்ற பெயரில் மரக்கன்றை நட்டிருந்தார். அத்துடன் அதை ஒரு சவலாக நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோருக்கு விடுத்தார். இதையடுத்து நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்றை நட்டு, புகைப்படங்களை வெளியிட, அது அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டது. மகேஷ் பாபவிற்காக இந்த மரக்கன்று எனவும் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இதை வைத்து மதுரையில் விஜய் ரசிகர்கள், போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் “நேற்று ஆந்திர நடிகரின் வேண்டுகோளை ஏற்று மரக்கன்றை நட்டார், நாளை ஆந்திர முதல்வரை போல் நல்லாட்சி அமைத்து தமிழகத்தை காப்பார்” என குறிப்பிட்டுள்ளனர். நடிகர் விஜய் இசைவெளியீட்டு விழாவில் அரசியல் பேசி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் போஸ்டர் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com