One Last Dance| உண்மையில் ’தளபதி கச்சேரி’ தான்.. ரசிகர்களின் எமோசனாக மாறியிருக்கும் ’ஜன நாயகன்’!
விஜய் ரசிகர்கள் 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெறும் படம் என பார்க்காமல், முழு தமிழ் சினிமா ரசிகர்களின் உணர்வாக கொண்டாடுகின்றனர். 'தளபதி கச்சேரி' பாடல், விஜய், அனிருத், அறிவு இணைந்து பாடியிருப்பதால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடல் வரிகள், விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக குறிப்பிடுவதால், ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கிறது.
ஜனநாயகன் வெறும் திரைப்படமாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மொத்த Emotion-ஆகவே பார்க்கப்படுகிறது. One Last Dance என விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெரு குரல் அறிவினுடைய பாடல் வரிகளிலும் அனிருத் இசையில் உருவாகிய தளபதி கச்சேரி பாடலை விஜய் , அனிருத் , அறிவு இணைந்து பாடியுள்ளனர்..
உண்மையில் இது தளபதி கச்சேரிதான்..
துள்ளலுடனும், ஒரு Vibe கொடுக்கும் வகையில் அமைந்துள்ள தளபதி கச்சேரி பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அப்பாடலில் விஜய் நடிப்பில் வெளியாகிய ஹிட் படங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் முத்துப்பாண்டி, லவ் டுடே, பிகில், All is well, Naa Ready போன்ற விஜய் படத்தின் Title, வசனம், பிரபலமான கதாபாத்திரங்களின் பெயர் போன்ற சில விஷயங்களை Bannerகளின் வாயிலாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இப்பாடலில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் அனைத்தும் விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, விஜய் பாடிய அந்த வரிகள் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. மாபெரும் நாடு அதன் வேர்களில் நம்ம வியர்வை என்று தமிழ்நாட்டுடைய வரைபடத்தை காட்டி பாடியிருக்கும் விஜய், ஆவோம் டூகெதர் பையா பையா என்று அவரகளது ரசிகர்களுக்கு அழைப்பு விடுப்பது போல் இருப்பது மட்டுமில்லாமல் சாதி பேதம் எல்லா லேதய்யா என்று பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற தவெகவின் TagLineக்கு ஏற்றது போல விஜய் பாடிய பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் நடந்த கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக கொள்கையில்லா கூட்டம், அணில்கள் கூட்டம், பக்குவம் இல்லா கூட்டம் என்று விமர்சிக்கப்பட்டது. அதே போல், கடந்த ஒரு மாதமாக Flight modeல் இருந்த தவெகவும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சற்று Active-ஆக தொடங்கி சமீபத்தில் கூட்டம் ஒன்றில் அனைவரும் கூடி தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கட்சியின் தலைவர் விஜய் முதல் மூத்த நிர்வாகிகள் வரை பேசினார்கள். தற்போது, வெளியே இருக்கும் Virtual Warriors-ஐயும் துவண்டு கிடக்கும் தொண்டர்களையும் பழைய உத்வேகத்துடன் செயல்பட தளபதி கச்சேரி பாடல் வாயிலாக Motivation கொடுத்திருக்கிறார்கள்.
தனக்குனு வாழாத.. தரத்துல தாழாத..
விஜய்யின்| ஆஸ்தான, நண்பா நண்பி என்ற வசனங்களையும் இந்த பாடல் விட்டுவைக்கவில்லை.. நண்பா.. நண்பி செல்லம் கேளு நம்பிக்கையா சேரு.. இருக்குதுடா.. காலம் பொறக்குது டா என்றும் தனக்குனு வாழாத.. அதாவது, தனக்காக வாழாமல் பொது சேவைக்கு வருவதை குறிப்பிட்டும் நீ தரத்துல தாழாத... தரத்தில் யார் என்ன சொன்னாலும் தாழாதீர்கள் ஒருத்தன் வாரான்... திருத்திட போறான் என்று அறிவு எழுதிய பாடல் வரிகள் மூலம் விஜய் தனது தொண்டர்களை Motivate செய்வதையே இது காட்டுகிறது.
மேலும், வரும் தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்கிட Steady , Smile buddy அதாவது, வரும் தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்காமல் Steady-ஆ இருங்க என்றும் அந்த பாடலில் குறிப்பிடுவது போல் இருக்கிறது. அதோடு சில வரிகள் ரசிகர்களுக்கு Vibe கொடுப்பது போலவும் அமைந்துள்ளது. மொத்தத்தில், தளபதி கச்சேரி Vibe Material-ஆக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜயின் Trade Mark வசனங்களான நண்பா நண்பி, வாங்கணா வணங்கங்கண்ணா போன்றவையும் இடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பாடலை, விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும் மறுபக்கம், பகவந்த் கேசரி படத்துடன் ஒப்பிட்டு பேசுவது, அனிருத்தின் பாடல் வேறொரு பாடலின் சாயலில் இருப்பதாக கூறி Troll செய்வது போன்ற பல விஷயங்களும் நடந்து வருகிறது.
விஜயின் கடைசி திரைப்படம் என்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம், விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் `ஜனநாயகன்' என்ற தலைப்புடன் வரவிருக்கும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஏனென்றால், இப்படத்தில் என்ன மாதிரியான அரசியலை கையாண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்குமுன் கத்தி, மெர்சல், சர்க்கார், தலைவா, தமிழன் போன்ற படங்களில் அரசியல் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

