நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை

நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை

நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை
Published on

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மொத்தமுள்ள 200 விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்களில் 50 செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் சமூக தொண்டாற்றி வருகிறார். இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக அவரை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கேற்ப கிடைக்கும் மேடைகளில் கூட, சினிமா விஷயங்களோடு கூடவே அரசியலையும் சேர்த்தே பேசிவிட்டு செல்வார். விஜய்கும் அரசியல் கனவு இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அவரது பேச்சும் இருக்கும்.

இதனிடையே அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர், கட்சி பெயர் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை. அந்தக் கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். இது தந்தை மகனுக்கு இடையேயான விரிசலை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதுதொடர்பாக பேசிய விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர், தனது அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் தனது கணவர் கேட்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்திய சர்ச்சைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விஜய் ஆலோசிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com