\
மைக் டைசன் காட்சிகளை எடுக்க அமெரிக்கா செல்லும் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படக்குழு

மைக் டைசன் காட்சிகளை எடுக்க அமெரிக்கா செல்லும் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படக்குழு

மைக் டைசன் காட்சிகளை எடுக்க அமெரிக்கா செல்லும் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படக்குழு
Published on

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தில் நடிக்கும் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் படக்காட்சிகளை எடுக்க ‘லைகர்’ படக்குழு அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் மைக் டைசன் நடிக்கிறார்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா - மைக் டைசன் காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளது. விசா விசாரணைக்காக தற்போது காத்திருக்கிறார்கள். அனைத்தும் சரியானதும் அமெரிக்கா செல்கிறார்கள். அமெரிக்க படப்பிடிப்பு முடிந்தது வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவுள்ளார்கள். தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com