நடிகர் விஜய் தன் கையில் ஒரு குழந்தையை தூக்கிக் வைத்து கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார் என தெரிகிறதா?
ட்விட்டர் பக்கத்தில் ஆயிரக்கணக்கில் ஷேர்களை அள்ளிக் கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தை நடிகரும் விஜய்யின் தம்பியுமான விக்ராந்த் வெளியிட்டுள்ளார். அதில், “ நான் ஆறுமாதக் குழந்தையாக இருந்த போது எடுத்தப் புகைப்படம் இது. கூடவே இருப்பது எனது இரண்டு அண்ணன்கள். ஒருவர் விஜய். இன்னொருவர், சஞ்சீவ்.” என்று குறிப்பிட்டுள்ளார். சிறு வயதில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ‘தெறி’க்கவிட்டு வருகிறார்கள். ஏதோ ஒரு பள்ளத்தாக்கின் முன் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ஒரு உல்லாச சுற்றுலாவின் போது எடுக்கப்பட்டுள்ளது.