நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
Published on

சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடக் கோரி விஜய் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் மனு இன்று நீதிபதிகள் எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. விஜய் தரப்பு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பிரதான மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com