\
டிசம்பரில் நிறைவடையும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு

டிசம்பரில் நிறைவடையும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு

டிசம்பரில் நிறைவடையும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு
Published on

‘பீஸ்ட்’ படப்பிடிப்பு வரும் டிசம்பரில் நிறைவடைகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள் அனிருத் இசையமைகிறார். சமீபத்தில், இப்படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது. விஜய் ‘பீஸ்ட்’ படத்திற்காக 120 நாட்கள் ஒதுக்கியுள்ளார். அதில், 75 சதவீத படப்பிடிப்பு இதுவரை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 25 சதவீத படப்பிடிப்பை இரண்டுக்கட்டங்களாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பை முடித்து வரும் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com