\
’பீஸ்ட்’ பிரம்மாண்ட சண்டைக் காட்சி: மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்

’பீஸ்ட்’ பிரம்மாண்ட சண்டைக் காட்சி: மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்

’பீஸ்ட்’ பிரம்மாண்ட சண்டைக் காட்சி: மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்
Published on

சண்டைக் காட்சிக்காக ‘பீஸ்ட்’ படக்குழுவினர் மீண்டும் ஜார்ஜியா செல்லவிருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார். இப்படத்தின் முதற்கட்பட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதியன்று ஜார்ஜியா புறப்பட்டார் விஜய். சில நாட்கள் அங்கு ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், மழையின் காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை திரும்பிது படக்குழு.

தற்போதுவரை ஜார்ஜியா, சென்னை, டெல்லி என்று இதுவரை 75 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழுவினர் அடுத்ததாக சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் 10 நாட்கள் படப்பிடிப்பை முடித்தப் பின்பு பிரம்மாண்ட இறுதிக்கட்ட சண்டைக் காட்சிக்காக மீண்டும்  ’பீஸ்ட்’ படக்குழு ஜார்ஜியா செல்லவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தில் மூன்று வில்லன்கள் என்றும் அதில் செல்வராகவன் மெயின் வில்லன் என்றும் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com