\
’கடைசியில் விஜய்’: ‘பீஸ்ட்’ புகைப்படங்களை ஒவ்வொன்றாக இறக்கி தெறிக்கவிடும் படக்குழு!

’கடைசியில் விஜய்’: ‘பீஸ்ட்’ புகைப்படங்களை ஒவ்வொன்றாக இறக்கி தெறிக்கவிடும் படக்குழு!

’கடைசியில் விஜய்’: ‘பீஸ்ட்’ புகைப்படங்களை ஒவ்வொன்றாக இறக்கி தெறிக்கவிடும் படக்குழு!
Published on

’பீஸ்ட்’ படத்தின் புதிய புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளது படக்குழு.

’கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன.

தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ’விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், விஜய் மற்றும் படக்குழுவினரின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

அப்படித்தான், மால் போல் இருக்கும் இடத்தில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், சதீஷ், சிவா அரவிந்த், அருண் அலேக்சாண்டர் உள்ளிட்டோர் வரிசையாக ஒளிந்துகொண்டு பார்க்க அவர்களுக்குப் பின்னால் கடைசியில் விஜய் நின்றிருக்கும் புதிய படத்தைப் பகிர்ந்து ’ட்ரெய்லருக்காக நாங்களும் காத்திருக்கிறோம்’ என்று அப்டேட் செய்திருக்கிறார்கள் . இதுவரை படக்குழுவினர் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் தவிர்த்து ஐந்தாறு புகைப்படங்களைத்தான் வெளியிட்டுள்ளார்கள். தற்போது, படம் வெளியாக இரண்டு வாரங்களே உள்ளதால் படக்குழுவினர் பல தரமான புகைப்படங்களை இன்னும் இறக்குவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com