நான்கே நாளில் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்த ‘அரபிக் குத்து’ பாடல்

நான்கே நாளில் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்த ‘அரபிக் குத்து’ பாடல்
நான்கே நாளில் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்த ‘அரபிக் குத்து’ பாடல்

’பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

காதலர் தினத்தையொட்டி வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி வெளியானதிலிருந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருவதோடு, வெளியான நான்கே நாட்களில் 50 மில்லியன் வியூஸ் ( 5 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை செய்துள்ளது. பாடல் வெளியானதிலிருந்து, நடிகை சமந்தா உட்பட பல சினிமா பிரபலங்களும் வெளிநாடுகளில் வசிக்கும் விஜய் ரசிகர்களும் இன்ஸ்டா ரீல்ஸில் நடனமாடி தெறிக்கவிட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இதுவரை 2 லட்சம் கமெண்டுகளுக்குமேல் பாடலை பாராட்டி கருத்துகளைக் குவித்திருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும், ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் 3 மில்லியன் லைக்குகளை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதால் ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கு முன்னதாக, ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ளது என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com