வெளியானது ‘அரபிக் குத்து’ வீடியோ பாடல்: கவனம் ஈர்க்கும் விஜய்யின் ஸ்டைல் அண்ட் ஸ்லோ நடனம்

வெளியானது ‘அரபிக் குத்து’ வீடியோ பாடல்: கவனம் ஈர்க்கும் விஜய்யின் ஸ்டைல் அண்ட் ஸ்லோ நடனம்
வெளியானது ‘அரபிக் குத்து’ வீடியோ பாடல்: கவனம் ஈர்க்கும் விஜய்யின் ஸ்டைல் அண்ட் ஸ்லோ நடனம்

’பீஸ்ட்’ படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தின், ‘அரபிக் குத்து’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்தன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் உலகளவில் ‘பிக்’ ஹிட் அடித்து யூடியூபில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. யூடியூபில் இதுவரை 40 கோடி பார்வைகளைக் கடந்தும் 6 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்தும் கெத்து காட்டி வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

’பீஸ்ட்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. அதன்படி, சரியாக படம் வெளியாகி 1 மாதம் கழித்து சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வரும் மே 11 ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி சமீபத்தில் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வீடியோ வெளியான நிலையில், இன்று ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகியுள்ளது.

தியேட்டரில் படத்தை பார்த்து ‘அரபிக் குத்து’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டாலும் தற்போது வெளியாகியுள்ள வீடியோ பாடலைப் பார்த்துவிட்டு ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். சிவகார்த்திகேயன் வரிகளும் அனிருத்தின் இசையும்  ’அரபிக் குத்து’ பாடலை நடனத்தால் பூமியை அதிரவைக்கும் பாடலாக கொண்டு வந்திருந்தாலும் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் அவரது பாணியிலேயே நடனம் அமைத்து ஈர்த்துள்ளார்.  கால்கள் மட்டுமல்லாது கேட்பவர்களின் நாடி, நரம்பு, உடம்பு என அத்தனையும் ஃபயர் ஆகும்படி அனிருத்தின் இசை அமைந்திருந்தது.

அதனால்தான், தனது தனி பாணியை கடைப்பிடித்துள்ளார் ஜானி மாஸ்டர். விஜய் சில வரிகளுக்கு கைகளையசைத்தும், உடம்பாலேயே ஆடியும், கால்களால் ஸ்லோவான ஸ்டைலிஷான அதேசமயம் ரசிக்கும்படியான மூவ்மெண்ட்ஸ்களைப் போட்டும் நாயகி பூஜா ஹெக்டேவை விட நம் கண்களை ஆக்கிரமித்து ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com