2 கோடி வியூஸ், 2 மில்லியன் லைக்ஸ் - யூட்யூப் சமஸ்தானத்தையே அதிர வைத்த 'அரபிக் குத்து'

2 கோடி வியூஸ், 2 மில்லியன் லைக்ஸ் - யூட்யூப் சமஸ்தானத்தையே அதிர வைத்த 'அரபிக் குத்து'

2 கோடி வியூஸ், 2 மில்லியன் லைக்ஸ் - யூட்யூப் சமஸ்தானத்தையே அதிர வைத்த 'அரபிக் குத்து'
Published on

’பீஸ்ட்’ படத்தின் ’அரபிக் குத்து' பாடல் யூட்யூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடலின் இசை இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து ரசிகர்கள் பலரின் ஹலோ ட்யூன்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

பாடல் வெளியான 16 மணி நேரங்களிலேயே இதுவரை யூடியூபில் 2 கோடி பார்வைகளையும் 2 மில்லியன் லைக்ஸ்களையும் 1 லட்சத்திற்கும் அதிகமான கமெண்ட்ஸ்களையும் குவித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். மேலும், யூட்யூப் ட்ரெண்டிங்கிலும் ‘அரபிக் குத்து’ முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com