நாளை தொடங்கும் விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் இணையும் படத்தின் படப்பிடிப்பு

நாளை தொடங்கும் விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் இணையும் படத்தின் படப்பிடிப்பு

நாளை தொடங்கும் விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் இணையும் படத்தின் படப்பிடிப்பு
Published on

விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது.

’அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’ ’10 எண்றதுக்குள்ள’, ‘கடுகு’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைராகி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியுடன் விஜய் மில்டன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘கோடியில் ஒருவன்’, ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தையும் இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். இந்த நிலையில், விஜய் மில்டனுடன் இணையும் புதிய படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் நாளை பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com